கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில் , ஐந்து தினங்களுக்கு முன்னரான 19ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராஜன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனை தேடி வந்தனர்

இந்நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வந்த அக்கராஜன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This