ஹைலண்ட் யோகட் மற்றும் பாலின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் மற்றும் பாலின் விலை குறைப்பு

ஹைலண்ட் யோகட் (தயிர்) மற்றும்  பாலின் விலையை  குறைப்பதற்கு மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஹைலண்ட் யோகட் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மில்கோ விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.

அத்துடன் 450 மில்லி லீற்றர் பசும்பால் பெக்கட்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

900 மில்லி லீற்றர்  பசும்பால் பெக்கட் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 380 ரூரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 450 மில்லி லீற்றர் பசும்பால் பெக்கட் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்திர் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share This