இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இன்று நடைபெற்றுள்ள நிகழ்ச்சியொன்றில் இந்த முதலீட்டு அறிவிப்பை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advanta(I)ge India என்ற கருப்பொருளைக் கொண்டு 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு கோடி மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்யா நாதெல்லாவுடனான சந்திப்புக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “திரு.சத்ய நாதெல்லா உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தியாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் லட்சியமிக்க விரிவாக்கம், முதலீட்டு திட்டங்கள் பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இச் சந்திப்பில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் போன்று பல விடயங்கள் குறித்து விவாதித்தது சிறப்பானதாக இருந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This