அணுசக்தி விபத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்க நடவடிக்கை

அணுசக்தி விபத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்க நடவடிக்கை

அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை (Sri Lanka Atomic Energy Regulatory Council) நடவடிக்கை எடுத்துள்ளது.

அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு 05 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.

குறித்த கட்டமைப்பின் ஊடாக நாட்டிற்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின் போது நாட்டிற்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி, மன்னார், நெடுந்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இந்த கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்கப்பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்தார்.

 

Share This