காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

திருகோணமலை – ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார்.
குறித்த நபர் 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பொத்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.