விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று அதிகாலை துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயது தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This