மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை
முன்னிலையானார்.
அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது.
இந்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.