
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முதல் டின் மீன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முதல் டின் மீன் ஏற்றுமதி தொகுதி நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல் வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நடைபெற்றது.
இந்த டின் மீன் ஏற்றுமதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதன் முறை என்று அரசாங்க தகவல் துறை தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
