உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று –  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் குறிந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதிக் காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

Share This