
சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல, ஹாலி எல, பசறை, மொனராகலை மாவட்டத்தில் பிபில, படல்குபுர, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, மற்றும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக மின்னல் தாக்குதலுக்கு இலக்கான ஹாலி எலவின் உடுகம பகுதியில் இரண்டு பசுக்கள் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
