10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்றிரவு 8.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலையில் ரம்புக்கன, தெஹியோவிட்ட, கேகாலை, அரநாயக்க, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, தொலுவ, பஹத்ததும்பர, உடுநுவர, தெல்தோட்ட மற்றும் பஸ்பாகே கோரலே போன்ற பகுதிகளுக்கும், கேகாலையில் வரகாபொல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.