காரைதீவில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணி பொது மக்களிடம் கையளிப்பு

அம்பாறை – காரைதீவு பகுதியிலுள்ள இராணுவ முகாம் அமைந்திருந்த காணி நேற்று (10) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
35 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் காரைதீவு பிரதேச சபையும் பொது நூலகமும் இயங்கியிருந்தன.
காரைதீவில் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த இராணுவ முகாம், காரைதீவு பிரதேச தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டது.