கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய காரின் ஓட்டுநர் என ஆண் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்,.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனையில் வசிக்கும் 27 வயதுடைய ஆண் சந்தேக நபர் கொழும்பு 13 ஐச் சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்ட பெண் 32 வயதுடைய மகரகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையில் நவம்பர் ஏழாம் திகதி 16வது பாதையில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 43 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், “புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
