இந்த ஐந்து சிலைகளையும் வீட்டில் வையுங்கள்… வாழ்க்கை சூப்பரா இருக்கும்

இந்த ஐந்து சிலைகளையும் வீட்டில் வையுங்கள்… வாழ்க்கை சூப்பரா இருக்கும்

நமது வாழ்வில் சுபீட்சமும் தொழிலில் முன்னேற்றமும் கிடைக்க வேண்டுமாயின் ஒரு சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் இந்த சிலைகளை வீட்டில் வைத்திருப்பது அவசியம்.

குதிரை சிலை

குதிரை சூரியனின் வாகனமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் குதிரை சிலை அல்லது படத்தை வைப்பதனால் முன்னேற்றம், வளர்ச்சி, உயர்வு ஏற்படும்.

யானை சிலை

மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படும் இரட்டை யானை சிலை பூஜை அறையில் இருப்பதால் பணவரவு, முன்னேற்றம், இலாபம் அதிகரிக்கும்.

ஆமை சிலை

மகாவிஷ்ணுவின் முக்கிய அவதாரமாக ஆமை கருதப்படுகிறது. எனவே இச் சிலையை வீட்டில் வைப்பதால் வாஸ்து பிரச்சினை சரியாகும். செல்வ வளம் பெருகும்.

ஆந்தை சிலை

மகாலக்ஷ்மியின் வாகனமாக கருதப்படும் ஆந்தை சிலையானது, செல்வம், முன்னேற்றம் போன்றவற்றை பெற்றுத்தரும்.

காமதேனு சிலை

கன்றோடு இருக்கும் காமதேனு சிலையை வீட்டில் வைப்பதால் தெய்வ சக்தி அதிகரிக்கும். கேட்கும் வரங்கள் கிடைக்கும். செல்வ செழிப்பு அதிகமாகும்.

Share This