கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (22.03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

இலங்கை கடற்படையினர் ‘MURASAME’ கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

மேலும், இந்த போர் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்த பின்னர் குறித்த கப்பல் நாளை (23) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

Share This