இத்தாலி பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பு
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை
சந்தித்துள்ளார்.
புளோரிடாவில நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியுடன் சிறந்த உறவுகளை பேணும் நோக்கில் இந்தி சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோர்ஜியா மெலோனி, மத்திய கிழக்கு மற்றும் உக்ரெய்னில் ரஷ்யாவின் போரைப் பற்றியும் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஆர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் நவம்பர் மாதம் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து டிரம்ப்பைச் சந்திக்க புளோரிடாவுக்குச் சென்றனர்.