டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி

டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி

இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

பணயக்கைதிகள் “வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார்.

காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக டொனால்ட் டிரம்பையும் அவர் பாராட்டினார்.

போர் நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500,000 பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் இறுதி முடிவுகளுக்காக திங்களன்று உச்சிமாநாட்மொன்றை நடத்துவதாக எகிப்து அறிவித்துள்ளது.

ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் உட்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று எகிப்துக்கு
செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு திங்களன்று ட்ரம்ப் இஸ்ரேலுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )