காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் மூத்த ஹமாஸ் அதிகாரி சலா அல்-பர்தாவில் மற்றும் அவரது மனைவியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காசா பகுதி முழுவதும் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதேவேளை, ஏமன் மீது அமெரிக்கா மீண்டும் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Share This