
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து மீளவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த குழு வருகை தரவுள்ளது.
சர்வதேச நாணயத்னதி விரிவான நிதி வசதியின் ஐந்தாவது மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது, மேலும் அதை அங்கீகரிக்க கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி நிர்வாகக் குழு கூட திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இலங்கையின் அவசர நிதி உதவி கோரிக்கை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திப்பீடுகள் குறித்து விவாதிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
