2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி

2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி

2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக காணப்படும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக காணப்படும் என கணித்துள்ளது.

உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்தும் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலைதீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

Share This