அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம்
இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருட்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான பங்களாதேஷ், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருட்களுக்கு வரவேற்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இடம்பெறுகிறது

1980 ஆம் அண்டு முதல்1990 ஆம் ஆண்டுகளில் இங்கு வளர்ச்சியடைந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு ஆண்டுக்கு46 ஆயிரம் கோடி ரூபா என்ற அளவில் ஏற்றுமதி நடைபெறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏற்றுமதியில் சுமார் 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்க ஏற்றுமதியை நம்பி பல பின்னலாடை நிறுவனங்கள் உள்ள நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு பணி புரிகின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியா திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க காரணம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This