07 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Sahibzada Farhan அதிகபட்சமாக 40 ஓட்டங்களையும், Shaheen Shah Afridi 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Kuldeep Yadav 03 விக்கெட்டுக்களையும், Jasprit Bumrah மற்றும் Axar Patel ஆகியோர் தலா 02 விக்கெட்டிக்களை வீழ்த்தினர்.
இதன்படி 128 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.5 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் Suryakumar Yadav அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றதுடன், Abhishek Sharma மற்றும் Tilak Varma ஆகியோர் தலா 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Saim Ayub 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.