இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்தல்

காஷ்மீரில் இடம்பெற்றுள்ள தாக்குதல் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் அர்த்தமுள்ள பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட முடியும், என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்’ என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளன.

விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் இராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது.

பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது. இதனிடையே தான் இன்று ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்தது. எவ்வாறாயினும் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

 

Share This