
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் பதிவாகியிருந்த மொத்த எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆகும். அவர்களில் 718 பேர் ஆண்கள் ஆவர்.
கடந்த ஆண்டு பதிவான எய்ட்ஸ் இறப்பு எண்ணிக்கை 47 ஆக இருந்தது. எவ்வாறாயினும் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20% குறையும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகரித்து வருவதால், விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டம் அறிவுறுத்துகிறது.
CATEGORIES இலங்கை
