ஏப்ரலில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏப்ரலில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 866,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This