
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
CATEGORIES இலங்கை
TAGS ElectionIlankai Tamil Arasu KachchiITAKLocal Government ElectionsM. A. SumanthiranS.ShritharanVavuniya
