மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது – பிரதமர்

மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 10 ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல.
ஒவ்வொரு இந்தியனின் இலக்கும் வளர்ச்சியடைந்த பாரதம்தான். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடையும் போது, அது பாரதத்தின் வளர்ச்சியே
இதுவே அதன் 140 கோடி மக்களின் விருப்பமாகும்” என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் பெரிய கூட்டம் இதுவாகும்.