யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். வெளிநாட்டில் தொழில் செய்துகொண்டிருந்த கணவர் ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அபிராமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி ஏற்பட்டவுடன் வீட்டிலிருந்த ராஜா யூடியூப்பைப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

ராஜாவின் அம்மாவும் இதற்கு உதவி செய்துள்ளார். இப் பிரசவத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. ஆனால், பிறந்த அக் குழந்தை சில மணித்தியாலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

இதன்போது அபிராமிக்கு சரியாக நஞ்சுக்கொடி எடுக்கப்படாததால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கீரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த குழந்தையை ராஜா அவரது வீட்டுக்கு அருகிலேயே புதைத்துள்ளார்.

தகவல் தெரிந்த பொலிஸார் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து ராஜா மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Share This