3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த வெந்நீர்
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் மூன்று வயதான ஓவியா. ஓவியாவை குளிக்க வைப்பதற்காக அவரது தாய் வாளியொன்றில் வெந்நீர் ஊற்றி வைத்துள்ளார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஓவியா, வெந்நீர் இருந்த வாளியைப் பிடித்து இழுத்ததில் சிறுமி மீது வெந்நீர் கொட்டியுள்ளது.
வெந்நீர் கொட்டியதும் சிறுமி அலறித் துடித்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி நேற்று புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.