சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் பலத்த மழை வீழச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் தென்மேற்கு மற்றும் அதனை அண்மித்த மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This