சர்வஜன அதிகாரம் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ஹசன் அலால்டீன் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிட ஹசன் அலால்டீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளக்கிழமை (21) மாலை முஸ்லிம் யாத்ரீகர்களுடன் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

ஹசன் அலால்டீன் முன்னதாக சர்வஜன அதிகாரத்தின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும், ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This