
பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரச மருத்துவ வைத்திய சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்பகிஷ்கரிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் ,இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இணக்கப்பாட்டை செயல்படுத்துவது தொடர்பான போக்குகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
