புதிய வங்கியொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த முயற்சிக்காக மத்திய வங்கியுடன் (CB) இணைந்து பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.