கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கோமரங்கடவல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
