தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திங்கள் கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை 10,000 ஐ அண்மித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வைபவங்கள், நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலம் என்பதாலும் சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறையும் சாத்தியம் இல்லையென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது.
அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம்9,705 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பவுனுக்கு 680 ரூபா உயர்வடைந்து ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 77,640 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 02 ரூபா உயர்வடைந்து 136 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன்
கட்டி வெள்ளி ஒரு கிலோ கிராம் 1,36,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.