இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 11,525 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் பவுணுக்கு 200 ரூபா உயர்வடைந்து ஒரு பவுண்92,200 ரூபாவு்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 18 கரட் தங்கம் விலையும் கிராமுக்கு 25 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 9,525 ரூபாவுக்கும், பவுனுக்கு 200 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் 76,200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 5 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 195 ரூபாவுக்கும், ஒரு கிலோ 1,95,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.