இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைவு

இன்றைய தினமும் தங்கத்தின் விலை குறைவு

தங்கத்தின் விலை இன்றைய தினம் 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி,24 கரட் தங்கம் 267,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் 245,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 18 கரட் தங்கம் 200,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதுடன் 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 25,063 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை நேற்றைய தினம் 10,000 ரூபாவால் குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் சற்று குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This