வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம்  மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பு, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகின்றது.

இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரம், 24 கரட் தங்கம் 279,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 256,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 18 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 34,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 32,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதுடன்
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 246,600 ரூபாவாகவும்
விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 03 நாட்களில் மாத்திரம் ஆபரண தங்கத்தின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்கத்தின் பொருளாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Share This