தமிழகத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தில் தங்கம் வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தின் சென்னையில் தங்கம் பவுன் விலை முதல்​முறை​யாக ஒரே நாளில் 680 ரூபா அதிகரித்து 77 ஆயிரம் ரூபாவை கடந்து வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டுள்​ளது.

நகை வாங்​கு​வோர் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​வின் பெறுமதி உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால்
பங்கு சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர்.

இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதி​கரித்து வரு​வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் தமிழகத்தில் ஒரு பவுன் தங்​கம் 58 ஆயிரம் ரூபாவாக இருந்​தது. பின்​னர், போர் பதற்​றம் உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக
உயர்ந்து வருகிறது.

இந்​தி​யா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி காரண​மாக, இது​வரை இல்​லாத வகை​யில் அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​வின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையே தங்​கம்​ விலை உயர்​வுக்​கு முக்​கிய காரண​மாக பார்க்​கப்​படுகிறது.

Share This