
தங்க சங்கிலி கொள்ளை: விரைவு நடவடிக்கையில் சந்தேக நபர் கைது
வக்வெல்ல பகுதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி மாலை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக்வெல்ல வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒருவர் பறித்து தப்பிச் சென்றது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றன.
சந்தேகநபர், தப்பிச் செல்ல முயன்ற தருணத்தில், அவ்விடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த காலி மோட்டார் சைக்கிள் படையணியின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மிக விரைவாகச் செயல்பட்டு சந்தேக நபரை விரட்டிச் சென்று கைது செய்தனர்.
காலி தலைமையகப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் படையணியின் துரிதமான மற்றும் திறமையான செயற்பாடு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
