குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்

குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு குடும்பத்திற்கு 02 தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் 400,000 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார்.
மேலும் இந்த வருடம் 25 லட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.