உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்

உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸுக்கு அருகிலுள்ள விமான தளம் ஒன்றில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் , உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” என்று பாராட்டினார்.

இருப்பினும், ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனைத்து ரஃபேல் F4 போர் விமானங்களும் 2035க்குள் வழங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

Share This