சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

ரிதீமலியத்த, ஹிங்குருகடுவ, கந்தேகெதர மற்றும் லுனுகல பொலிஸ் பிரிவுகளில் ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதி பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரிதீமாலியத்த, தலவேகம் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிகுருகடுவ, நாரன்கும்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு துப்பாக்கிகளுடன் மியானகந்துர நாரன்கும்புரவைச் சேர்ந்த 51 வயதுடைய சநதேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், கந்தேகெதர, தெஹிகொல்லகந்துர பகுதியில் உள்ள வீட்டின் சமையலறை புகைபோக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் 52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நெல் வயலில் உள்ள ஒரு மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் லுனுகல ஜனதாபுர பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாட அல்லது வேறு குற்றங்களுக்கு அவற்றைப் பயன்படுத்த இந்த சட்டவிரோத துப்பாக்கிகள் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ரிதீமலியத்த பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
