முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் அவர் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நண்பர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான மக்காச்சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

 

Share This