
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று (02) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
