பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 05 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 05 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )