தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 242,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்து வருகிறது.

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3260.27 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share This