ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு

ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தங்களை தனிமைப்படுத்திவிட்டதாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் நாளை திங்கட்கிழமை உக்ரைனில் அவசர உச்சிமாநாட்டை நடத்த உள்ளனர்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி “ஐரோப்பிய இராணுவத்தை” உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய உறவு “முடிவடைகிறது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்ட பின்னர், உக்ரைன் “எங்கள் ஈடுபாடு இல்லாமல் எங்கள் முதுகுக்குப் பின்னால் செய்யப்படும் ஒப்பந்தங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்றும் அவர் கூறினார்.

Share This