ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு

ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல ஐரோப்பிய தலைவர்களும் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய- உக்ரைன் போருக்கு தீர்வு காணும் வகையில் மற்றும் நாளை திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய தலைவர்கள் நேரடியாக ட்ரம்பிடம் தங்களது உறுதியான தீர்மானத்தை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பான செய்தியை எடுத்துச் செல்லும் இது ஒரு முன்னோடியில்லாத முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள், ஜெலென்ஸ்கி மற்றும் பிற நட்பு நாடுகளுடன் உக்ரைன் போருக்கான கலந்துரையாடலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இச்சந்திப்பு, அலெஸ்காவில் நடந்த, ஆனால் தோல்வியுற்ற ட்ரம்ப் – புடின் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நடைபெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This