ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை

பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ஆக்கிரமிக்கத் தயாராகி வருகின்றனர் என்று சபாநாயனர் முகமது பாகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எங்கள் படைகள் எதிரிகளின் அனைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருகின்றன.

அவர்கள் சிறிதளவு நடவடிக்கை எடுத்தாலும், அந்தப் பிராந்திய அரசின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகளும் இடைவிடாத, ஓயாத தாக்குதல்களால் குறிவைக்கப்படும் எனவும் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடாவில் உள்ள ஈரானிய எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஹர்முஸ் நீரிணையை பாதுகாப்பதற்காகவோ அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி தரைவழிப் படையெடுப்புக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான வீரர்களையும் வளைகுடாவில் நிலைநிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முழுவதையும் கையாளும் கார்க் தீவு, சாத்தியமான இலக்குகளில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவு, “முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் ஒரு சிறிய எண்ணெய் தீவு” என்று அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினம், தரைவழிப் படையெடுப்பு ஏற்பட்டால் செங்கடலில் உள்ள கப்பல் போக்குவரத்தை ஈரான் குறிவைக்கும் என்று பெயர் குறிப்பிடப்படாத ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது மோதலைப் பெருமளவில் விரிவுபடுத்தி உலகளாவிய வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )